Thursday, April 10, 2008

காண வருகிறேன்!


கவிஞர்  நா.இராசசெல்வம்,
புதுச்சேரி,
  இந்தியா.


அம்மாஉனக்கு மகன்எழுதும் ஆசை கடிதமே!
அன்புடனே வணக்கஞ்சொல்லி வரையும் கடிதமே!
அம்மா!நீயும் எப்படிஇருக்க? பார்க்கத் துடிக்கறன்.
ஆசையோடு ஓடிவந்து அணைக்கத் துடிக்கறன்.

பாலும்சோறும் ஊட்டிஎனக்கு பண்பு காட்டியே
பாதைதவறி டாமல்என்னைக் காத்த தெய்வமே!
நாலும்தெரிஞ்சி வளர்ந்துநாளும் உயர்ந்து நிற்கவே
நல்லவழி காட்டியென்னை வளர்த்த தெய்வமே!

தங்க,தம்பி, அப்பா,பாட்டி, தாத்தா வோடநான்
தமிழர்பொங்கல் நாளில்துள்ளி யாட வருகிறன்.
பொங்கிவரும் பொங்கலோடு கரும்பும் மஞ்சளும்
புதியஆடை தரும்பொங்கல் காண வருகிறன்.

கண்ணைப்போல என்னைக்காத்து வளர்த்த அன்னையே!
களித்துஉனது மடியில்உறங்க ஓடி வருகிறன்.
மண்ணைநம்பி வாழும்உழவர் வாழ்க்கை தன்னிலே
மகிழ்ச்சிபொங்கும் நாளில்உன்னைக் காண வருகிறன்.

உழைத்துவாழும் வாழ்க்கைபோல உயர்ந்த தில்லையே
உழவர்நெஞ்சம் களித்திருக்கப் பசியு மில்லையே!
தழைத்துநாளும் தரணிவாழ உழைக்கும் யாவரும்
நன்றிசொல்லும் நாளில்உன்னைக் காண வருகிறன்!
(அம்மா உனக்கு மகன்….)

No comments: